வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

by Editor / 13-06-2025 12:50:17pm
வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தாய்லாந்து புகேட் தீவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI 379), வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (ஜூன் 13) அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தநிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, அந்தமான் கடல் பகுதியில் சுற்றிவந்து புகேட்டில் மீண்டும் தரை இறங்கியது. ஆரம்ப கட்ட விசாரணையில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via