முன்ஜாமின்நிபந்தனையை தளர்த்த முடியாது நீதிமன்றம் மறுப்பு.
பழமையான சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யபட்ட சம்பவத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி காதர் பாட்சா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன்னை பழிவாங்கும் நோக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்ததாக காதர்பாட்சா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இந்த புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நடத்திய சி.பி.ஐ, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து, சென்னையிலுள்ள அவர் வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிலைக் கடத்தலுக்கு உதவியாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிம்னற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில் முன்ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்.4 வாரம் இன்னும் முடிவடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிமன்றம் மறுப்பு. (சிலைக்கடத்தல் விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் பொன்.மாணிக்க வேலுக்கு கடந்த மாதம் 14-ம் தேதி நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியிருந்தது)
Tags : முன்ஜாமின்நிபந்தனையை தளர்த்த முடியாது நீதிமன்றம் மறுப்பு.