அமைச்சரை பாராட்டிய பாஜக எம்எல்ஏ

by Editor / 03-09-2021 03:01:44pm
அமைச்சரை பாராட்டிய பாஜக எம்எல்ஏ

சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சட்டசபையில் வைத்து, மனதார பாராட்டி உள்ளார் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி.மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை அதை மாசோ போல வேறு யாரும் செய்ய முடியாது என்று சரஸ்வதி கூற அவையில் இருந்த அதிமுக தவிர்த்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி அதை வரவேற்றனர்.பாஜக நான்கு சட்டசபை உறுப்பினர்கள் பெற்றிருப்பதால் சட்டசபைக்குள் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அழுத்தம் கொடுக்கும் என்று கூறப்பட்டது ஆனால் அரசு செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டியதற்கு பாஜக தயங்கவில்லை என்பதற்கு அந்தக் கட்சியின் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி பேச்சு ஒரு உதாரணம்.பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் என்ன நினைத்தாரோ தெரியாது.. சரஸ்வதி பேசத் தொடங்கியது முதல் சிரித்துக்கொண்டே இருந்தார். சரஸ்வதியின் பின் இருக்கை வானதி சீனிவாசனுக்கு, ஒதுக்கப்பட்டிருந்தது. வானதி சீனிவாசன் சிரித்துக் கொண்டிருந்து அடக்க முடியாமல், ஒரு கட்டத்தில் தனது கையால் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிறார். அந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவையில் அவருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து இருந்த பிற உறுப்பினர்கள் யாரும் அவ்வாறு சிரிக்கவில்லை. 

 

Tags :

Share via
Logo