ரூ.1 கோடி பாக்கி.. உதயகுமார் கேள்வி

கடந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவுக்கு மின்சார கட்டணம் ரூ.1 கோடி பாக்கி இருப்பதால் நடப்பு ஆண்டு திருவிழாவுக்கு மின்சாரம் வழங்கப்படாது என மதுரை மின் வாரியம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிமுக MLA ஆர்.பி. உதயகுமாரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு, "தொகை பாக்கியை பற்றி கவலைப்பட வேண்டாம். திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடியும். அதற்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன" என கூறினார்.
Tags :