புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை விவரங்கள்
தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை வருகின்ற 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
2 சக்கரம், 4 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வது
பழைய அபராத தொகை : ரூ. 400
புதிய அபராத தொகை : ரூ 1000( முதல் முறை ரூ 10,000( இரண்டு மற்றும் இரண்டாம் முறைக்கு மேல்)
2 சக்கரம், 4 சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது
பழைய அபராத தொகை : ரூ 1000
புதிய அபராத தொகை : ரூபாய் ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை.
2 சக்கரம், 4 சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவது
பழைய அபராத தொகை : ரூபாய் 1000 - ரூ.1500.
புதிய அபராத தொகை : 15,000 (முதல் முறை) - ரூ.25,000( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்)
2 சக்கரம், 4 சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன்
பழைய அபராதம் : ரூ.100
புதிய அபராதம் : ரூ.1000
சிக்னல் விதிமீறல்
பழைய அபராதம் : ரூ. 100
புதிய அபராதம் : ரூ.500-1500
நிறுத்தற் கோடுகள் விதிமீறல்
பழைய அபராதம் : ரூ.100
புதிய அபராதம் : ரூ. 500 - ரூ.1500
உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள்
பழைய அபராதம் : ரூ. 200
புதிய அபராதம் : ரூ.1000 - ரூ.2000
மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன்
பழைய அபராதம் : ரூ.100
புதிய அபராதம் : ரூ.500
வாகன பதிவு(Registration) இல்லாமல் வாகனம் இயக்குவது
பழைய அபராதம் : ரூ.2500
புதிய அபராதம் : ரூ.2500 - ரூ.5000
லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது.*
பழைய அபராதம் : ரூ.2500
புதிய அபராதம் : ரூ. 5000
போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது
பழைய அபராதம் : ரூ.1000
புதிய அபராதம் : ரூ.1000 (முதல்முறை) ரூ.10000( இரண்டாம் முறை மற்றும் அதற்கு மேல்
கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசு
பழைய அபராதம் : ரூ.1000
புதிய அபராதம் : ரூ.10,000
இருசக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவது
பழைய அபராதம் : ரூ.700
புதிய அபராதம் : ரூ.2,000 - ரூ.4,000
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது
பழைய அபராதம் : ரூ.100
புதிய அபராதம் : ரூ.500
பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது
பழைய அபராதம் : ரூ.100
புதிய அபராதம் : ரூ.500
மது குடித்து வாகனம் ஓட்டுவது
அபராதம் : ரூ. 10,000
குறிப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் மற்றும் அரசு அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்கள் மீது ரூபாய் 10,000 அபராதம் வசூலிக்கப்படும்
Tags :