எல்லா விழாக்களுக்கும் அரசியல் சாயங்கள் பூசப்படுகிறது - கனிமொழி

by Staff / 07-01-2024 02:50:07pm
எல்லா விழாக்களுக்கும் அரசியல் சாயங்கள் பூசப்படுகிறது - கனிமொழி

 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்..பி. கனிமொழி , பொங்கல் விழாவில் ஜாதி அடையாளங்கள், ஜாதி பெருமைகள் இடம்பெறக்கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் உறுதி ஏற்க வேண்டும் .நம் எல்லோரையும் வாழ வைக்கும் சூரியன், இயற்கை மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய நாள் தான் பொங்கல் பண்டிகை. தமிழகத்தில் எந்த சூரியன் ஒளி ஏற்றி வருகிறது என்பது குறித்து நான் எதுவும் பேசவில்லை. எல்லா மதத்தினரும் கொண்டாடக்கூடிய பண்டிகை தான் பொங்கல். ஆனால், இப்போது எல்லா விழாக்களுக்கும் அரசியல் சாயங்கள் பூசப்படுகிறது' என்று தெரிவித்தாா்..

 

Tags :

Share via

More stories

Logo