பிரதமர் மோடிக்கு தங்க தமிழ்ச்செல்வன் சரமாரி கேள்வி
பாரத் மாதா கி ஜே என்று சொன்னால் போதுமா பாரதத்தில் உள்ள மாதாக்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா என தேனி திமுக மக்களவை வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதற்கு மோடியின் பதில் என்ன? பொள்ளாச்சி பாலியல் வழக்கு, பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் வழக்கு, மணிப்பூர் கலவரம், இப்போது பிரஜ்வல் ரேவண்ணா எதற்குத் தான் மோடி வாயைத் திறந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
Tags :