அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக தொடர்கிறது-இ .பி.எஸ்

சேலத்தில் இன்று பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் முன்னாள் முதல்வரும்,அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது,அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் திமுக தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை,திமுவினர் கமிஷன் கேட்ப்பதால் யாரும் ஒப்பந்தம் எடுக்க வர மறுக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி களிலும் எந்த பணிகளும் நடக்கவில்லை,மின்கட்டணம் உயர்வு 53 சதமும்,வீட்டுவரி 100 சதமும் உயர்த்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags :