கோவையை ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல்...

by Staff / 29-11-2023 11:39:02am
கோவையை ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல்...

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், நோயெதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு கசாயம் குடிக்கவும், கொதிக்க வைத்த தண்ணீரை மட்டும் அருந்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via