குடியரசுதினவிழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

by Editor / 26-01-2025 12:17:19pm
குடியரசுதினவிழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் 76 வது குடியரசுதினவிழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெற்றுவருகின்றன . இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். முப்படைகளின் வீரதீரச்செயல்கள் நடைபெற்றன.

 

Tags : குடியரசுதினவிழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

Share via