பெயர்பலகை  பிறமொழியில் இருந்தால் கருப்பு மை பூசுங்கள்;  தமிழர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

by Editor / 23-02-2023 08:28:00am
பெயர்பலகை  பிறமொழியில் இருந்தால் கருப்பு மை பூசுங்கள்;  தமிழர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக் கட்டளை சார்பில் அதன் நிறுவனரும் பாமக நிறுவனருமான ராம தாஸ், 'தமிழைத் தேடி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று நடைபெற்றது. பிரச்சார வாகனத் தில் இடம்பெற்றுள்ள தமிழன்னை சிலையை ராமதாஸ்திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது :எங்கும் தற்போது தமிழ் இல்லை. நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோமா? குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழில் வாழ்த்தினாலும் நன்றியை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் கட்டாயம் தமிழ் படிக்கவேண்டும். இங்கு 17 ஆண்டுகளுக்கு இச்சட்டம் இயற்றியும் நடைமுறைக்கு வரவில்லை.  இன்றிலிருந்து உங்கள் வீட்டில் தமிழிலே பேசுங்கள். தூயதமிழில் பேசினால் அன்று சிரிப்பார்கள். இன்றும் அதே நிலைதான். 50 ஆயிரம் தமிழறிஞர்கள் கலப்பு மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசலாமே.  பிறமொழியில் பேசியதற்காக தமிழன்னையே மன்னியுங்கள்.     பிரான்சில் தேங்க்யூ என்ற வார்த்தை நுழைந்ததற்கு அங்கு புரட்சி செய்தார்கள் . அந்த வார்த்தைக்கு கொதித்தெழுந்தார்கள் . இங்கு பிறமொழியை விரட்ட வீதிக்கு வரப்போகிறீர்களா?  தமிழன்னையை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ 5 கோடி தருகிறேன். அப்பணத்தை என் தலையை அடகு வைத்தாவது கொடுக்கிறேன். ஜியோ போப் என்ற மத போதகர் தன் பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டு தன் கல்லரையில் ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுத சொன்னார். 2 குடியரசு தலைவர்கள் தமிழ் பள்ளியில் படித்தார்கள் . சி சுப்பிரமணியம், அறிஞர் அண்ணா உள்ளிட்டோர் தமிழ் பள்ளியில்தான் படித்தார்கள்.  இந்த மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் புலவர்கள் புரட்சி செய்யலாமே. தமிழில் இல்லா பெயர் பலகைமீது கருப்பு மையை பூசுங்கள். தாய் மொழி தமிழ் என கூறிவிட்டு வீட்டில் தமிழ் பேசுவதில்லை. 2 குழந்தைகளுக்கு செம்மலர். வெண்பா என கடந்தவாரம் பெயரிட்டேன்.  பிறமொழியில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள் .   வழக்கத்தில் உள்ள ஒரு சொற்றொடரில் 8 மொழிகள் உள்ளது.  போர்ச்சிகியம், பிரஞ்ச், டச்சு, இந்தி,மலாய், ஸ்பெயின், பிரேசில் என  கலப்பு மொழியில் பேசுகிறோம். தமிழன்னை சிலையை வடித்த சிற்பி சிவாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர் தமிழைத்தேடி செல்லும் தன்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று பொதுமக்களிடம் அவர் பேசினார். 

 

Tags :

Share via