கனமழையால் 31 பேர் உயிரிழப்பு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

by Staff / 22-12-2023 01:21:29pm
கனமழையால் 31 பேர் உயிரிழப்பு - மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன்,

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை அமைச்சகத்தில் இருந்த 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் கண்காணித்தன எனவும் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே மீட்புப் பணியில் மத்தியக் குழு இறங்கியது எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories