வடசென்னையை கலக்கிய செயின் பறிப்பு திருடர்கள் கைது

by Admin / 05-02-2022 03:22:26pm
வடசென்னையை கலக்கிய செயின் பறிப்பு திருடர்கள் கைது

வட சென்னை பகுதியில் ராயபுரம் வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மூன்று இடங்களில் வழிப்பறித் திருடர்கள் செயினை அறுத்து சென்றனர். 

இது சம்பந்தமாக தொடர் புகார்கள் வரவே வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பொறுப்பு சுந்தரவதனம், உதவி ஆய்வாளர் காதர் மனுவேல், சரவணன், அசோக்குமார், முன்னா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

தனிப்படையினர் சம்பவம் நடந்த ராயபுரம் பனைமர தொட்டி, தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெரு, ராயபுரம் நிச்சானி மருத்துவமனை அருகில் உள்ள கண்காணிப்பு பதிவுகளை ஆய்வு செய்தனர். 

ஒரு சம்பவத்திற்கும் அடுத்த சம்பவத்திற்கும் இடையில் பல நாட்கள் இடைவெளி இருந்ததால், போலீசாருக்கு துப்பு கிடைக்க சிரமமாக இருந்தது. மேலும் குற்றவாளிகள் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பல்வேறு கண்காணிப்பு  கேமராவில் குறிப்பிட்ட இரண்டு சக்கர வாகனம் ஈடுபட்டதை தெரிந்தவுடன் அந்த புதுவாகனம் குறித்து தனிப்படை போலீசார் இரண்டு சக்கர வாகன விற்பனையாளர்களிடம் விசாரணை செய்தனர்.
 
மேலும் 85 க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது குற்றவாளிகள் குறித்து அவர்களுக்கு சரியான தெளிவு கிடைத்தது இதையடுத்து புதுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், நூருல்லா இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். 

அவர்களிடமிருந்து 11 சவரன் நகை செல்போன் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடசென்னையை கலக்கிய வழிப்பறி திருடர்களை கைது செய்த தனிப்படையினரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


 
 

 

Tags :

Share via