ஐபோன் ஹேக்கிங் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்
சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது ஐபோன்கள் ஹேக் செய்யப்படுவதாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் தொலைபேசிகளை அரசு ஹேக் செய்வதாக மெசேஜ் வந்ததாக எம்.பி.க்கள் சிலர் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. நடந்தது என்ன என்பது முழுவதுமாக ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.
Tags :