ஆயுள் தண்டனை கைதி சிறையில் தற்கொலை.

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வை பட்டியைச் சேர்ந்த தவ ஈஸ்வரன், அவரது தந்தை முருகன் ஆகியோர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இன்று அதிகாலை கழிவறையில் தவ ஈஸ்வரன் தற்கொலை முடிவெடுத்துள்ளார். இதை அறிந்து சக கைதிகள் அவரை மீட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சிறை நிர்வாகம் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :