ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 77 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களப் பகுதியைச் சேர்ந்தவர பாலு என்ற 77 வயது முதியவர்.இவர் கடந்த 30.06.2023 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் பாலு என்ற முதியவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு காலம் மெய் காவல் சிறை தண்டனை விதித்துள்ளார்.
மேலும் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய குற்றத்திற்க்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்ததோடு சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு அளித்தார்.
Tags : ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 77 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.