மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்...

by Editor / 05-11-2021 03:31:37pm
மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்...

மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி காலமானார்.
 
மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்து வந்தவர், 76 வயதான சுப்ரதா முகர்ஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
 
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சுப்ரதா முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார். சுப்ரதா முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories