டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா... நாளை நடக்கிறது பதவியேற்பு விழா.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யார் பதவியேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது பாஜக. இதில், அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதில், புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ரோஹிணி தொகுதியில் வெற்றிபெற்ற விஜேந்தர் குப்தா, ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்ற மனோஜ் சிங் சிர்சா, டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா, டெல்லி முன்னாள் முதலமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜு உள்ளிட்டோர் போட்டியில் இருந்தனர்.இந்த சூழலில் டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகா குப்தா டெல்லி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Tags : டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா... நாளை நடக்கிறது பதவியேற்பு விழா.