காதல் கைகூட பூஜை.. ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த இன்ஸ்டா ஜோதிடர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் ஜோதிடரிடம், “எனக்கு காதல் திருமணம் நடக்குமா?” என கேட்டுள்ளார். அதற்கு அந்நபர், “நீங்கள் விரும்பியபடி பெற்றோர் சம்பந்தத்துடன் காதல் திருமணம் நடக்கும். அதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். அதனை நம்பி அப்பெண், ரூ.6 லட்சம் வரை இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலி ஜோதிடரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :



















