இலத்தூரில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார் .

by Editor / 19-02-2025 11:26:12pm
இலத்தூரில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார் .

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் கடந்த 11-ம் தேதி எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சிவகாசி பகுதியை சேர்ந்த கமலி என்பதும், அவரை அவரது கணவர் ஜான் கில்பர்ட் என்பவர் கொலை செய்து இலத்தூர் பகுதியில் கொண்டு வந்து எரித்ததும் தெரியவந்தது.

 அதனை தொடர்ந்து, ஜான் கில்பர்ட்க்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு தொடர்பாக போலீசருக்கு அறிவுரை வழங்கிய நிலையில், தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூடுதலாக வழக்குப்பதிவு செய்து போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ஜான்கில்பர்ட்டின் தந்தையான ஜான் ஜெரால்ட் மற்றும் அவரது தாயான ஜெனிபர் மற்றும் அவரது மற்றொரு உறவினரான ஞான சௌந்தரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்த நிலையில், இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜான் கில்பர்ட் மற்றும் கமலின் மகளான நான்கு வயது பெண் குழந்தையானது ஜான்கில்பர்ட்டின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : இலத்தூரில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார் .

Share via