அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் - முதலமைச்சர் ஆலோசனை

by Staff / 10-07-2023 02:07:39pm
அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் - முதலமைச்சர் ஆலோசனை அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துறை சார்ந்த அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தக்காளி, சின்ன வெங்காயம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவது, பொருட்கள் சீராக கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 

Tags :

Share via

More stories

Logo