தேர்தல் கூட்டணி - ஜி.கே.வாசன் நாளை அறிவிப்பு

by Staff / 25-02-2024 01:46:43pm
தேர்தல் கூட்டணி - ஜி.கே.வாசன் நாளை அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை நாளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிடுகிறார். அதிமுக, பாஜகவுடன் நெருக்கம் காட்டும் தமாகா இந்த முறை எந்த அணியில் இடம்பெறும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜி.கே.வாசனுடன் அதிமுக, பாஜக சார்பில் தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ள அக்கட்சி, 2 தொகுதிகளை கேட்டு வருகிறது.இது பற்றிய முக்கிய அறிவிப்பை அக்கட்சி நாளை வெளியிடுகிறது. ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி. பதவியை அதிமுக அவருக்கு வழங்கிய நிலையில், தொடர்ந்து, அதிமுகவுடனேயே சேர வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி கோரும் வகையில், பாஜகவுடன் சேரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via