தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Staff / 16-06-2025 11:56:48pm
தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories

Logo