CLAT தேர்வில் தேர்ச்சி.. மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர்

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் (CLAT) மாணவி ராகினி தேர்ச்சிப் பெற்றுள்ளார். தொடர்ந்து இவர், ஜபல்பூர் தர்மசாஸ்திரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் பயில தேர்வாகியுள்ளார். திருச்சி மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ராகினி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார் அப்போது, அந்த மாணவிக்கு, சால்வை அணிவித்த முதலமைச்சர், தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கினார்.
Tags :