நான்குவழி சாலையில் மாநகராட்சி குப்பை லாரி தீ பிடித்து விபத்து - பரபரப்பு

மதுரை மேலூர் பைபாஸ் ரோடு வளர்நகர் 4 வழி சாலையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொண்டு செல்லும் டிப்பர் லாரி குப்பைகளை ஏற்றிக்கொண்டு மாநகர பகுதிக்குள் சென்ற போது மெத்தை ஒன்று தீ பிடித்த நிலையில் இருந்ததை கவனிக்காத ஓட்டுநர் வண்டியை ஓட்டிச்சென்ற நிலையில் வாகனத்தில் தீ பிடித்து முன்பக்கம் முழுவதும் எரிந்த சேதம்.இதனையடுத்து சாலையில் சென்ற வாகனஓட்டிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
Tags :