1 கிலோ கஞ்சாவுடன் வந்த இருவர் அதிரடியாக கைது.

by Staff / 30-08-2024 04:01:16pm
1 கிலோ கஞ்சாவுடன் வந்த இருவர் அதிரடியாக கைது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் மேக்கிழார்பட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பணிக்காக நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக 1. 200 கிலோ கஞ்சாவுடன் வந்த காளைத்தேவர் நகரை சேர்ந்த அறிவு (20) கொக்குடையான்பட்டி மதியழகன் (52) ஆகிய இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் காவல் துறையினர் தினமும் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories