திருக்கோயிலில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி, காலபைரவர்  சுவாமிக்கு  சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.

by Editor / 21-01-2025 10:58:35pm
திருக்கோயிலில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி, காலபைரவர்  சுவாமிக்கு  சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.

திருக்கோயிலில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி, காலபைரவர்  சுவாமிக்கு  சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், கடுமையான வெப்பம் குறைந்து, நல்ல மழை பெய்து, விவசாயம் செழித்தோங்கவும்,   வெப்ப நோய் தொற்றுகளிலிருந்து மக்கள் நலமுடன் வாழவும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.  மாலை 04.30 மணிக்கு, அருள்மிகு காலபைரவர் ,சுவாமிக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது.   

அருள்மிகு காலபைரவர் சுவாமிக்கு  வண்ண வண்ண,  பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார்.பக்தர்கள் பைரவர் அஷ்டகம், தேவாரம், திருவாசகம்,  சிவபுராணம், பைரவர் 108 போற்றி, பாராயணம் செய்தனர்.பக்தர்களுக்கு தயிர் சாதம், உளுந்த வடை, அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags :

Share via