முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பதவி இறக்கும் வரை அனைவரும் பாடு படுவோம்!. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடையே பேசிவருகிறார். சேலத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் பேச்சை தொடங்கினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி எதிரிகள், துரோகிகள் அதிமுக வை வீழ்த்த நினைக்கின்றனர். ஆனால் எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என்றும், அவங்க அப்பனாலே முடியல இவரு என்ன பண்ண போறாரு, ஸ்டாலின் தலைமையிலான அரசை வீழ்த்தும் வரையில், முக ஸ்டாலினை பதவி இறக்கும் வரையில் அதிமுக தொண்டர்கள் போராட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
Tags :