கோஸ், வெங்காய துவையல் ரெசிபி

by Editor / 25-08-2022 03:19:49pm
 கோஸ், வெங்காய துவையல் ரெசிபி

தேவையானவை- அரிந்த கோஸ் - 100 கிராம், வெங்காயம்- 100 கிராம், பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - சிறு துண்டு, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் -5, கடுகு - 1 ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், கோஸ் சேர்த்து வதக்கி, பின் மிக்சியில் உப்பு, புளி சேர்த்து வதக்கிய கலவையை நைசாக அரைத்து, சுவையான கோஸ், வெங்காய துவையல் தயார்.

 

Tags :

Share via