கேரளாவில்  காங்கிரஸ்  20 இடங்களில் வெற்றி பெறும் - சச்சின் பைலட் நம்பிக்கை.

by Editor / 23-04-2024 09:37:51am
கேரளாவில்  காங்கிரஸ்  20 இடங்களில் வெற்றி பெறும் - சச்சின் பைலட் நம்பிக்கை.

மக்களவைத் தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். வயநாட்டில் நேற்று பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது? 2024 மக்களவைத் தேர்தல் புதிய மாற்றத்திற்கானது. முதியோர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக உழைக்கப்போவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்தியுள்ளது. இந்த முறையும் மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்து கேரளாவில் காங்கிரசை 20 இடங்களை வெல்ல வைப்பார்கள் என தெரிவித்தார்.

 

Tags : சச்சின் பைலட் நம்பிக்கை.

Share via

More stories