சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம்: அமைச்சர்

by Staff / 10-12-2022 12:42:39pm
சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம்: அமைச்சர்

சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மாண்டஸ் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமரம் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.32 ஆயிரமும், பகுதி சேதம் அடைந்திருந்தால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் சேத விவரங்கள் இன்று மதியத்திற்குள் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via