கோயில் குளத்தில் மூழ்கிய மாணவர்கள் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோத்சவத்தில், வேதபாராயணம் படிக்க வந்த ஹரிஹரன் (16), வெங்கட்ராமன் (19), வீரராகவன் (24) ஆகிய மூவர் குளத்தில் நீராடும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்த 3 வேத பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் நாசர் வழங்கினார்.
Tags :