2026 தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் சீமான்

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் ஒரு தொகுதிக்கான வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 ஆம் தேதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார் பின்னர் அங்கு மணமகன் சகோதரன் மருத்துவர் கௌஷிக் பாண்டியன் என்பவரை அடுத்த தென்காசி சட்டமன்ற தொகுதியினுடைய வேட்பாளர் என மேடையிலே தெரிவித்துள்ளார்.
Tags :