பழைய செல்லாத நோட்டுகள் விவகாரம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  

by Admin / 05-08-2021 01:40:23pm
பழைய செல்லாத நோட்டுகள் விவகாரம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  


 
பழைய செல்லாத நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவ்டிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய செல்லாத நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ள ரிசர்வ் வங்கி, இவ்வாறு பழைய நோட்டு, நாணயம் விற்பனையில் ஈடுபடும் சிலர், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதன்மூலம் மேற்கண்ட விற்பனை அல்லது பரிவர்த்தனைக்கான கட்டணம், கமிஷன், வரி போன்வற்றை மக்களிடம் இருந்து வசூலிப்பதாக  தகவல்கள் வந்துள்ளது.  இதுபோன்ற நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபடுவதில்லை. எனவே, இதுபோன்ற கும்பலிடம் ஏமாற வேண்டாம். இத்தகைய செயலில் ஈடுபடும் நிறுவனம், தனி நபர்கள் உட்பட யாருக்கும் கட்டணம், வரி வசூல் செய்வதற்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

 

Tags :

Share via