அண்ணா நூலகம்: செங்கோட்டையனுக்கு ஸ்டாலின் பதில்

by Editor / 23-08-2021 05:02:10pm
அண்ணா நூலகம்: செங்கோட்டையனுக்கு ஸ்டாலின் பதில்

 

அண்ணா நூலகம் பாழடிக்கப்பட்டிருந்தது என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கிரி பேசினார்.

அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் அண்ணாவின் பெயரில் உருவாக்கிய அண்ணா நூலகத்தை பாழ்படுத்தி விட்டனர் என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து பேசுகையில், அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியதாக உறுப்பினர் குறிப்பிட்டார். நாங்கள் அண்ணா நூலகத்தை பாழ் படுத்தவில்லை. அதற்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அங்கு இந்தியாவிலேயே முதல் முறையாக கல்வி சேனல் அமைக்கப்பட்டு அங்கிருந்து செயல்படுகிறது. சிவில் சர்வீஸ் என சொல்லப்படுகின்ற தேர்வுகளுக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிதி நிலைக்கு ஏற்ப அவை சீர் செய்யப்பட்டது எனக் கூறினார்.இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.

அண்ணா நூலகம் குறித்து எங்களது உறுப்பினருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் கூறினார். அண்ணா நூலகத்தை சீர்படுத்துவதை நான் ஒத்துக்கொள்கிறேன். அதற்கு முன்பு அண்ணா நூலகம் பாழ் அடிக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு கூட வாடகைக்கு விடப்பட்டது. அதை தடுப்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றோம். அதன் பின்பு நீங்கள் சீர்படுத்தி இருக்கலாம். அண்ணா நூலகத்தை மேலும் நாங்கள் சீர்படுத்துவோம் என பேசினார்.

 

Tags :

Share via