தி.மு.க மாவட்டசெயலாளா்கள் கூட்டத்தில் முதலமைச்சா் அறிவுறுத்தல்

by Admin / 09-11-2025 03:47:57pm
தி.மு.க மாவட்டசெயலாளா்கள் கூட்டத்தில் முதலமைச்சா்  அறிவுறுத்தல்

 இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து ஆலோசனை நடத்தினாா்.. இதில் வலியுறுத்தப்பட்ட செய்திகள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதி உள்ள ஒருவரின் பெயர் கூட விடுபட்டு விடக்கூடாது என்றும் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தகுதி இல்லாத நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதை மாவட்டச் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மீண்டும் திமுக வெற்றி பெறக் கூடாது என பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு செயல்படுகிறதாகவும் யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் களம் நம்முடையது என்று கூறியதோடு வாக்காளர் திருத்த பணியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தங்கள் பகுதியில் தீவிரமாக பங்கேற்று படிவங்கள் அனைத்தும் உரிய நேரத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்பங்கேற்பு. 

 

 

 

 

Tags :

Share via