பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை.. மறுக்கும் ஈரான்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி, மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுத்த பின்னரே, போர் நிறுத்தம் பற்றி பேசலாம் என திட்டவட்டமாக ஈரான் கூறியுள்ளது.
Tags :