அக்டோபர் 16-ம் தேதி சுதாகரன் விடுதலை
2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றனர். நான்காண்டுகள் கடந்த பின்னர் அபராதத் தொகையைக் கட்டியதால் சசிகலாவும் இளவரசியும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலையாகிவிட்டனர். அபராதத் தொகை கட்டாததால், சுதாகரன் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்தக் காலமும் முடிவடையவே, வரும் அக்டோபர் 16-ம் தேதி சுதாகரன் விடுதலையாகப்போகிறார்.
Tags :