தென்காசியை ஆளும் காசி விஸ்வநாதர்-உலகம்மை நாயகி

by Writer / 22-06-2022 07:40:37am
தென்காசியை ஆளும்  காசி விஸ்வநாதர்-உலகம்மை நாயகி


திராவிட கட்டட கலையை  பறைசாற்றும் கோவில் ஒன்பது அடுக்கு கோபுரம்.178அடி உயரம் கொண்ட கோபுரத்தில்
800 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கோபுரம் 1990களில் எழுப்பபெற்றது.இக்கோபுரம் 1457ல்பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டு  1518  அழகன்  குலசேகரனால் கட்டி  முடிக்கப் பெற்றதாக  வரலாறு.இதற்கு பிறகு பாளையக் காரர்களாலும் ஆங்கிலேயராலும் சிதைக்கப்பெற்றது.தமிழக அரசு அறநிலையத்துறை பொதுமக்கள்நிதியோடு இன்றிருக்கும் ஒன்பது நிலை கொண்ட கோபுரம் அரசு தலைமை ஸ்தபதி. முத்தையா ஸ்தபதியால்கட்டி கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளது இக்கோவில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார்.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனை வணங்கினால்வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதரை வணங்கிய புண்ணியம் கிடைக்கப்பெறும் புனித தலம்.கோவிலில் மூலவர்காசி விஸ்வ நாதர்,உலகம்மை,,                        தல விருட்சம்  செண்பக மரம் ,தீர்த்தம்  காசி  தீர்த்தம். பராக்கிரம  பாண்டியன்  சிவனை  வழிபட  காசிக்கு  அடிக்கடி சென்றுவருகையில்,சிவபெருமான் கனவில் தோன்றி,இங்கேயே சிற்றாறங்கரையில் ,செண்பக வனத்தில் கட்டு என்று சொல்ல..மறுநாள் பராக்கிரம பாண்டியன் செண்பகவனத்தை சென்று பார்லவயிட ..அங்கே புற்றில் சுயம்புவாக லிங்கம் தோன்றியிருந்ததை கண்டு  அங்கேயே கோவில்கட்டினான்.அக்கோவில் தான் தென்காசி விஸ்வநாதர் ஆலயம்.தென்காசி         என்று சொல்லும் பொழுதே  ..சிலுசிலுவென வீசும் தென்றல்காற்று...அடடா..என்ன சுகமான காற்று என்றுஅதன்  பெருமையை பேசிக்கொண்டே  இருக்கும்  குளிர்காற்று....பொதிகைத் தென்றல் காற்று .மேற்குத் தொடர்ச்சி  மலையில்    தண்ணீர் நர்த்தனமாடும்அருவி நங்கைகளின் அணிவகுப்பு.  சிவன்-முருகன் கோவில்கள் அதிகமாகநிர்மாணிக்கப்பட்டிருக்கும்  புண்ணிய பூமி

தென்காசியை ஆளும்  காசி விஸ்வநாதர்-உலகம்மை நாயகி
 

Tags :

Share via