தங்கம் கடத்தல் வழக்கில் சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது

தங்கம் கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் முன்னாள் உதவியாளர் மற்றும் மற்றொரு நபரை சுங்கத்துறை அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில், அதிகாரிகள் புதன்கிழமை பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடமிருந்து 35.22 லட்சம் மதிப்பிலான 500 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட தங்கம், சுங்கச் சட்டம் 1962 பிரிவு 110ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :