"குளிச்சா குத்தாலம்" பாடலை பாடி சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிரபல பாடகரின் வீடியோ வைரல்.

by Editor / 30-05-2024 10:13:49am

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையிலும், கோடை விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளையும் கூட்டம் தினம் தோறும் அதிகளவு காணப்படுகிறது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் அனுராதா ஸ்ரீராம் மற்றும் தேவன் ஏகாம்பரம் ஆகியோர் குற்றால அருவிக்கும் வந்துள்ளனர்.இதில் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் அழகை கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

மேலும் குற்றால ரசிகர்களை உற்ச்சாக படுத்தும் விதமாக  ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான   "குளிச்சா குத்தாலம்"  என்கிற பாடலை மெயின் அருவி கரையின் முன்பு பாடி குறு வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக குற்றால ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

Tags : "குளிச்சா குத்தாலம்" பாடலை பாடி சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிரபல பாடகரின் வீடியோ வைரல்.

Share via

More stories

Logo