பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு

by Staff / 23-05-2022 02:52:51pm
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ள இந்தோ பசுபிக் பொருளாதார திட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு புறப்பட்டு சென்றார். இன்று  அதிகாலை  சென்றடைந்தார். விமான நிலையத்தில் இந்திய வம்சாவழியினர் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஆஸ்திரேலிய ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்துகிறது. முன்னதாக டோக்கியோ செல்லும் முன்பு மோடி விடுத்த டுவிட்டர் செய்தியில் இந்த பதவிக்கு தொடர்பாகவும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகவும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பசுபிக் பொருளாதார திட்டத்தை இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ளார். இதில் பங்கேற்க பிரதமர் மோடியின் முக்கிய திட்டமாகும் இத்திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று வெளியுறவு செயலர் வினய் குறிப்பிட்டுள்ளார் ரஸ்யாவின் போர்  சீனாவின் ராணுவ அத்துமீறல்கள் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளையும் மோடி உலகத் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார் 40 மணி நேர ஜபன் விஷயத்தில் 23 முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo