நெல்லையில் போலீசை கண்டித்து தீக்குளிக்க முயன்ற திருநங்கை
நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தில் வசித்து வருகிறார் சிறிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில் அவர் குறித்து காவல்துறைக்கு சிலர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது புகார் அடிப்படையில் ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் விசாரணைக்கு பின்பு நகைகளை திருப்பி அளித்ததாகவும் கூறிய ஸ்வேதா அதில் ஒரு கம்மல் மற்றும் கை செயின் உட்பட ஒன்றரை பவுன் நகை காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்து காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிலையில் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும்நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கையில் பூச்சிக்கொல்லி மருந்துடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பூச்சிக்கொல்லி மருந்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
எதிர்பாராத விதமாக திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் அவரை மீட்டனர் பின்னர் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நகைக்காக காவல் துறையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :