அக்டோபர் 4–ந்தேதி முதல் 10–ம் வகுப்பு  மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

by Editor / 01-10-2021 03:38:57pm
அக்டோபர் 4–ந்தேதி முதல் 10–ம் வகுப்பு  மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

 

அக்டோபர் 4 ந்தேதி முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்து வழங்கியது. அதேசமயம், உயர் கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் வரும் 4 ந்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் 2021, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் 4.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள், பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via