எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளுடன் சென்ற 22 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்தக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை கைது செய்து இலங்கை முகாமுக்கு கொண்டு சென்றனர். இதனால் தூத்துக்குடி மீனவ கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு உடனடியாக மீனவர்களை மீட்க கோரிக்கை எழுந்துள்ளது.
Tags : எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.