சங்கரன்கோவில் அருகே முறைகேடான தொடர்பு காரணமாக விவசாயி கொலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய சாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம் (40). விவசாயி. ஆபிரகாம் இரவு வீட்டில் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் சராசரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலாங்குளம் போலீசார் விவசாயி ஆப்ரஹாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆப்ரகாம் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார்? என்பதை பற்றி சின்ன கோவிலாங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில் முறைகேடான தொடர்பு என தெரியவந்துள்ளது
Tags : சங்கரன்கோவில் அருகே முறைகேடான தொடர்பு காரணமாக விவசாயி கொலை.
















.jpg)


