கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது.
குமரி மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.எனினும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து தலைமறைவா கவே இருந்து வருகிறார்கள். எனவே தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்த ரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வாரண்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒழுகினசேரியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சொத்தவிளை ஒசர விளையை சேர்ந்த செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63) என்பவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த செந்திலுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் ஆஜராகவில்லை. தலைமறைவாகிவிட்டார். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை யிலான போலீசார் அவரை இன்று காலை கைது செய்த னர். கைது செய்யப்பட்ட அவரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைதான செந்தில் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரவுடிகள் பட்டியலிலும் செந்தில் பெயர் இடம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags :