கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்

by Staff / 24-05-2023 01:45:14pm
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜுன் 5ஆம் தேதி குடியரசுத்தலைவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் திறப்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறொரு தேதியில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜுன் மூன்றாம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டிடத்தின் திறப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories