உச்சநீதிமன்றம் செல்லும் ஒ.பி.எஸ் ...வெற்றியைக்கொண்டாடும் இ.பி.எஸ்
அ.தி.மு.கவிற்குள் நிகழும் யுத்தம் என்ன மாதிரியான விளைவை உருவாக்க போகிறது என்ற கேள்விகள் அனைவருக்கும் எழுந்து கொண்டிருக்கிறது .மாறி..மாறி தீர்ப்புகள் ..அடுத்து டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால், அதுஉச்ச நிதிமன்றத்தின் மேல் முறையீடு வழியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்போ...எதுவாக இருந்தாலும் இப்பொழுது...மோதிக்கொள்ளும் ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரில் ஒருவர் பலகீனப்படும் பொழுது அதனால் கட்சியை விட்டு வெளியேறுகிறவர்களால்,அ.தி.மு.க விற்கு எந்த பாதிப்பும் உருவாகாது .பெரியார் -அண்ணா பிரிவால் , கலைஞர்- எம்.ஜி.ஆர் பிரவால் நிகழ்ந்தது போன்ற மாற்றங்கள் எதுவும் நிகழாது.ஆர்.எம்.வ்.,திருநாவுக்கரசு,ஈ.வி.கே.சம்பத்,கண்ணதாசன்,ராஜேந்தர் ,பாக்கியராஜ் போன்றவர்கள் ஆரம்பித்த கட்சியாகத்தானிருக்குமே தவிர,மாபெரும் வரலாற்றை உருவாக்கும் இயக்கமாக தொடங்கவோ. ..இல்லை.. தொடரவோ முடியாது . இருவரும் மக்களிடம் தம் திறமையால் பெற்ற செல்வாக்கு கொண்டவர்கள் கிடையாது.அ.தி.மு.கவிற்குள் கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டு வெளியே தெரிந்தவர் .இவர்களது வெளியேற்றத்தால் கொஞ்சம் சலசலப்பு ஏற்படுமே தவிர...பெரிதாக ஒன்றும் நிகழ்ந்து விடாது . சந்தடி சாக்கில் மறக்கடிக்கப்படுவர். புதிய எந்த அரசியல் மாற்றங்கள் நிகழாது...
Tags :