காங்கிரஸ் வேட்பாளர் 3ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

by Staff / 30-01-2023 12:36:11pm
காங்கிரஸ் வேட்பாளர் 3ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள தேர்தல் பணிமனையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, திக என பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு திமுகவை பொறுத்தவரை பொதுக் கூட்டம் அதிகமின்றி மக்களை நேரடியாக சந்திப்பது தான் தேர்தல் வியூகம் என்றும், ஈரோடு அருகே 1ஆம் தேதி திமுக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், 3ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via